Home » கேளிக்கை » மயிரிழையில் உயிர்தப்பினார் ராதிகா

மயிரிழையில் உயிர்தப்பினார் ராதிகா

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா சரத்குமார், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பே கிளம்பி விட்டார்.

👤 Sivasankaran21 April 2019 2:44 PM GMT
மயிரிழையில் உயிர்தப்பினார் ராதிகா
Share Post

கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் திரண்டு இருந்த நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் அங்குள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா சரத்குமார், குண்டுவெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே கிளம்பியதன் மூலம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து ராதிகா அவரது டுவிட்டர் பக்கத்தில், `இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.