ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
'தர்பார்' படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தார். படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டு விட்டார்கள். ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் போன்றவற்றை செல்போனில் படம் எடுத்து இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளார்கள். இதனால் படக்குழுவினர் செய்வதறியாது அதிர்ச்சியில் உள்ளனர்.