Home » கேளிக்கை » புயலில் ஒரு தோணி படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி

'புயலில் ஒரு தோணி' படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி

புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண், கோபிகிருஷ்ணன், ரித்திகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

👤 Sivasankaran30 April 2019 2:44 PM GMT
புயலில் ஒரு தோணி படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி
Share Post

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி தன்னை தேடி வரும் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொடுக்கிறார். அவர் இசையமைத்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்தியில் ஒன்று, தெலுங்கில் ஒன்று, கன்னடத்தில் ஒன்று என பிற மொழிகளிலும் மிக குறைந்த படங்களுக்கே அவர் இசையமைத்துள்ளார்.

சில வருட இடைவெளிக்குப்பின் பவதாரிணி, 'புயலில் ஒரு தோணி' என்ற படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண், கோபிகிருஷ்ணன், ரித்திகா ஆகியோர் நடிக்கிறார்கள்.