Home » கேளிக்கை » யோகிபாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

யோகிபாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

யோகி பாபுவின் வித்தியாசமான தலைமுடியை சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பெரிதும் ரசித்து சிரிக்கின்றனர்.

👤 Sivasankaran2 May 2019 3:11 PM GMT
யோகிபாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Share Post

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம் இருவரும் கதாநாயகர்கள் ஆனதால் நகைச்சுவை நடிப்பிற்கு ஒரு வெற்றிடம் உண்டாயிற்று. சரியாக அந்த சமயத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகிபாபு பலரின் பாராட்டுதல்கள் பெற்ற நல்ல நகைச்சுவை நடிகரானார்.

கடந்த ஆண்டில் மட்டும் 20 படங்களில் நடித்து முடித்துள்ளார். கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், சர்கார் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.

யோகி பாபுவின் வித்தியாசமான தலைமுடியை சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பெரிதும் ரசித்து சிரிக்கின்றனர்.

தற்சமயம் 19 படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவரின் கால்ஷீட்டிற்காக கதாநாயகர்கள் கூட காத்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை.

நயன்தாரா தனது படங்களில் யோகிபாபு இருக்க வேண்டும் என்று சிபாரிசு வேறு செய்கிறாராம்.

இது வரை படத்திற்கு தொகை பேசி வாங்கிய யோகிபாபு தற்போது ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பளம் என்று நிர்ணயித்து உள்ளாராம். இருப்பினும் நிறைய தயாரிப்பாளர்கள் யோகிபாபுவின் கால்ஷீட்டுக்காக பணத்துடன் காத்திருக்கின்றார்கள்.