அசுரவதம், மீகாமன், ரேணிகுண்டா போன்ற படங்களில் நடித்து அசத்தியவர் சஞ்சனா சிங். இவரின் அடுத்தபடம் உடுக்கை. இந்த படத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கமாக எடுத்துச் சொல்லப்படுகிறது.
படத்தின் இயக்குநர் எம்.ஆர்.பாலமித்ரன். விபின், உமர், சஞ்சனா சிங், அங்கிதா, லட்சுமி, வலினா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி நடிக்க, சொற்கோ பாடல்களை எழுதி இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் சஞ்சனா சிங் மிகவும் தாராளமாகவே கவர்ச்சிக் காட்டி ரசிகர்களை கவர இருக்கிறார் என்பது முக்கியமான தகவலாகும்.