Home » கேளிக்கை » மது குடித்துவிட்டு ஓட்டலில் ரகளை செய்த டாப்சி

மது குடித்துவிட்டு ஓட்டலில் ரகளை செய்த டாப்சி

படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் தான் பார்ட்டியும் நடந்தது.

👤 Sivasankaran8 May 2019 4:19 PM GMT
மது குடித்துவிட்டு ஓட்டலில் ரகளை செய்த டாப்சி
Share Post

ஆடுகளம், வந்தான் வென்றான் உள்பட பல படங்களில் நடித்தவர் டாப்சி. இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கடந்த ஆண்டு மன்மர்ஜியான் என்ற படம் வெளியானது. அபிஷேக் பச்சன், விக்கி கவு‌ஷல் இருவரும் கதாநாயகர்களாக நடித்த இந்த படம் முக்கோண காதல் கதையை கொண்டது.

விக்கி கவு‌ஷல் டாப்சி ரகளை செய்ததை பற்றி கூறுகையில்,

மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் தான் பார்ட்டியும் நடந்தது.

நன்றாக குடித்த டாப்சி குடிபோதையில் தோட்டத்தில் படுத்து கொண்டு எழுந்து வர மாட்டேன் என்று பிடிவாதம் செய்தார். நீங்கள் வராவிட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று கூறினேன். அப்படியாவது எழுந்து வருவார் என கூறினேன். ஆனால் அங்கேயே தூங்குவேன் என்று அடம் பிடித்தார் என்று கூறினார்.