Home » கேளிக்கை » மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க வருகிறார் கீர்த்தி சுரேஷ்

மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க வருகிறார் கீர்த்தி சுரேஷ்

சர்கார்’ படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த தமிழ்ப்படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் இருந்தார்.

👤 Sivasankaran9 May 2019 4:09 PM GMT
மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க வருகிறார் கீர்த்தி சுரேஷ்
Share Post

'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தன் திறமையால் அடுத்தடுத்து வந்த படங்களில் வளர்ந்தார். நிறைய படங்களில் நடித்தார். 'நடிகையர் திலகம்' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். சர்கார்' படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த தமிழ்ப்படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் இருந்தார்.

கீர்த்தியின் கைவசம் தற்போது எந்த தமிழ்ப் படமும் இல்லை. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.