Home » கேளிக்கை » பிரியா ஆனந்த் மதம் மாறி விட்டாரா?

பிரியா ஆனந்த் மதம் மாறி விட்டாரா?

பிரியா ஆனந்த், 'எல்கேஜி' படத்தில் நடித்து வசூல் ரீதியாகவும் அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ...

👤 Sivasankaran13 May 2019 1:47 PM GMT
பிரியா ஆனந்த் மதம் மாறி விட்டாரா?
Share Post

பிரியா ஆனந்த், 'எல்கேஜி' படத்தில் நடித்து வசூல் ரீதியாகவும் அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது. மதம் மாறி விட்டாரா? பிரியா ஆனந்த் என்ற வகையில் செய்திகள் வந்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த பிரியா ஆனந்த், அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்கு பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது. இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன் என்று கூறினார்.