Home » கேளிக்கை » மீண்டும் வருகிறார் ஸ்ரேயா

மீண்டும் வருகிறார் ஸ்ரேயா

ஸ்ரேயா தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி’ படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

👤 Sivasankaran19 May 2019 4:35 PM GMT
மீண்டும் வருகிறார் ஸ்ரேயா
Share Post

முன்னணி நடிகை, ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்தார். `நரகாசூரன்' படத்தில் நடித்தார். அரவிந்த்சாமி ஜோடியாக இப்படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இதற்கு பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இடைவெளி விட்டு இருந்த ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி' படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

`சண்டக்காரி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கிராமம் சார்ந்த பகுதியில் நடக்க இருக்கிறது.