Home » கேளிக்கை » கீர்த்தி சுரேஷின் தயக்கத்திற்கான காரணம் என்ன?

கீர்த்தி சுரேஷின் தயக்கத்திற்கான காரணம் என்ன?

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

👤 Sivasankaran20 May 2019 5:06 PM GMT
கீர்த்தி சுரேஷின் தயக்கத்திற்கான காரணம் என்ன?
Share Post

ரஜினி முருகன் படம் மூலம் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகை என்ற பெயரை எடுத்தார். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோவே இல்லை என்பது முக்கிய செய்தி.

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவே தயக்குகிறார் என்கிறார்கள்.