Home » கேளிக்கை » இளையராஜாவின் முன் பாட பயம் என்கிறார் ரம்யா நம்பீசன்

இளையராஜாவின் முன் பாட பயம் என்கிறார் ரம்யா நம்பீசன்

அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன்.

👤 Sivasankaran21 May 2019 4:10 PM GMT
இளையராஜாவின் முன் பாட பயம் என்கிறார் ரம்யா நம்பீசன்
Share Post

ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா? படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ரம்யா நம்பீசன் கூறுகையில்,

எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. சேதுபதி படத்திற்கு பின் அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன.

என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே இனிமேல் நடிக்க ஒப்புக்கொள்வேன்.

இளையராஜா இசையில் பாட எனக்கு பயம். இளையராஜா 75 நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம் என்றார் சிரித்துக் கொண்டே.