Home » கேளிக்கை » யோகா செய்யும் படங்களை வெளியிட்டு அசத்தும் அமலா பால்

யோகா செய்யும் படங்களை வெளியிட்டு அசத்தும் அமலா பால்

அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

👤 Sivasankaran22 May 2019 5:08 PM GMT
யோகா செய்யும் படங்களை வெளியிட்டு அசத்தும் அமலா பால்
Share Post

அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்து வருகிறார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சியே என்று கூறியுள்ளார்.

அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, 'இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்' என பதிவிட்டு இருக்கிறார்.

ஒற்றைக் கால் ஆசனம், கால்களையும் முதுகையும் உயரே நிறுத்தியபடியான ஆசனம் என பல்வேறு போஸ்களை தந்திருக்கும் அமலாபாலின் பயிற்சிகளை கண்ட ரசிகர்கள், 'உங்கள் உடல் ரப்பர் போல் வளைகிறதே' என ஆச்சரியத்தை பதிலாக பதிவிட்டுள்ளனர்.