Home » கேளிக்கை » இந்திரா காந்தியாக நடிக்கும் ரவீணா டாண்டன்

இந்திரா காந்தியாக நடிக்கும் ரவீணா டாண்டன்

ரவீணா டாண்டன் ஏற்கனவே தமிழில் சாது, ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

👤 Sivasankaran28 May 2019 3:54 PM GMT
இந்திரா காந்தியாக நடிக்கும் ரவீணா டாண்டன்
Share Post

கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். கன்னடத்தில் எடுக்கப்பட்டு, தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உருவான வெற்றிப்படம். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்.

ரவீணா டாண்டன் ஏற்கனவே தமிழில் சாது, ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.