Home » கேளிக்கை » மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் தல?

மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் தல?

படம் இறுதி கட்டத்தில் உள்ளது. ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

👤 Sivasankaran29 May 2019 4:18 PM GMT
மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் தல?
Share Post

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிறது.

அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சில இளம் பெண்களுக்காக கோர்ட்டில் வாதாடி அவர்களுக்கு நியாயம் பெற்று தருவது போன்ற கதையில் உருவாகிறது. ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார்.

படம் இறுதி கட்டத்தில் உள்ளது. ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்காக அஜித்குமார் தனது எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.