Home » கேளிக்கை » சசிகுமாரின் அடுத்த படம் பற்றிய விவரங்கள்

சசிகுமாரின் அடுத்த படம் பற்றிய விவரங்கள்

இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

👤 Sivasankaran30 May 2019 4:22 PM GMT
சசிகுமாரின் அடுத்த படம் பற்றிய விவரங்கள்
Share Post

சசிகுமார் தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.