Home » கேளிக்கை » உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்

உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலமைப்பை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

👤 Sivasankaran1 Jun 2019 3:57 PM GMT
உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்
Share Post

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வந்தார் கீர்த்தி சுரேஷ். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, 'நடிகையர் திலகம்' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, 'சர்கார்' படத்துக்குப் பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து இப்படி மாறியிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலமைப்பை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.