உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர்,
இவர் அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து கடந்த டிசம்பர் 1ம் திகதி திருமணம் செய்து கொண்டார் .
தற்போது தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இருவர் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, மேலாடை அணியாமல் கவர்ச்சியாக புடவை கட்டி வந்திருந்தார். அந்த நேரத்தில் போட்டோவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், மிகவும் கவர்ச்சியான குத்தாட்டம் ஒன்றையும் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.