Home » கேளிக்கை » நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

அனைவரையும் தனது நடிப்பால், வசனத்தால் சிரிக்க வைத்தவர்.

👤 Sivasankaran10 Jun 2019 2:49 PM GMT
நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்
Share Post

நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). அனைவரையும் தனது நடிப்பால், வசனத்தால் வயிறு குலுங்கும்படி சிரிக்க வைத்தவர். கமல்ஹாசன் 3 வேடங்கள் ஏற்று நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.

இவர் படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும் வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றவர்.

கிரேசி மோகன் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் அவருடைய உயிர்பிரிந்தது. இது திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.