Home » கேளிக்கை » இணையதளங்களில் அதிகளவில் பகிரப்படும் நயன்தாராவின் புகைப்படம்

இணையதளங்களில் அதிகளவில் பகிரப்படும் நயன்தாராவின் புகைப்படம்

நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

👤 Sivasankaran13 Jun 2019 3:11 PM GMT
இணையதளங்களில் அதிகளவில் பகிரப்படும் நயன்தாராவின் புகைப்படம்
Share Post

தற்போது தமிழ் பட உலகில் நம்பர் - 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் நடித்த, நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை தந்து வசூலை அள்ளி குவிக்கின்றன.

நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் இப்போது, புதுமண தம்பதிகள் போல் உலகின் பல்வேறு நாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

தேன்நிலவு ஜோடிகளுக்கு உகந்த கிரீஸ் நாட்டுக்கு இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவை வெள்ளை உடையில் புதிய தோற்றத்தில் புகைப்படம் எடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதாவது, ஒரு கண்ணாடி அறைக்குள் நயன்தாரா நிற்பது போன்றும், கண்ணாடிக்கு வெளியே விக்னேஷ் சிவன் நின்று செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்றும் அந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.