விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கின்றார்கள்.
திருநங்கை வேடத்துக்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடித்தார் விஜய் சேதுபதி. அவரது தோற்றத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. திருநங்கை குழந்தையை கடத்துவதுபோன்று படத்தில் இடம்பெற்ற காட்சிக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டமும் நடந்தது. ஆனால் ரசிகர்கள் பெருமளவில் இந்த படத்தை ரசித்துப் பாராட்டினார்கள்.
சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற 27-ம் திகதி முதல் ஜூலை 7-ம் திகதி வரை கொரியாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் ஜூலை 11-ம் திகதி முதல் ஆகஸ்டு 1-ம் திகதி வரை நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் சூப்பர் டீலக்ஸ் தேர்வாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.