Home » கேளிக்கை » தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ராதிகா ஆப்தே

தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ராதிகா ஆப்தே

'வேர்ல்டு வார் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

👤 Sivasankaran17 Jun 2019 2:00 PM GMT
தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ராதிகா ஆப்தே
Share Post

பாலிவுட் படங்களில் மட்டும் அல்லாது ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. பல படங்களில் நடித்திருந்தாலும், இன்னமும் தன்னை ஒரு வெற்றி பெற்ற கதாநாயகியாக கருதவில்லை என்று கூறினார்.

கபாலி, டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான 'தி வெட்டிங் கெஸ்ட்' படத்தில் நடித்ததுடன் 'வேர்ல்டு வார் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்னமும் தான் வெற்றியை எட்டவில்லை என்னும் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் ராதிகா ஆப்தே. அவர் மேலும் கூறுகையில்,

"நான் நடித்திருக்கும் 'தி வெட்டிங் கெஸ்ட்' படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது. எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக இருக்கின்றது.

இன்றுவரை நான் என்னை வெற்றி பெற்ற ஹீரோயினாக உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்யவில்லை" என கூறினார்.