Home » கேளிக்கை » ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்ததா?

ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்ததா?

நிச்சயதார்த்தம் பற்றி பரவும் தகவலுக்கு ரெஜினா இதுவரை பதில் சொல்லவில்லை.

👤 Sivasankaran19 Jun 2019 4:03 PM GMT
ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்ததா?
Share Post

'கண்ட நாள் முதல்' என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது சிம்புதேவன் இயக்கும் கசட தபற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ரெஜினாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது. இந்த நிலையில் ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகவும், மிகவும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாகவும் பேசுகின்றனர்.

நிச்சயதார்த்தம் பற்றி பரவும் தகவலுக்கு ரெஜினா இதுவரை பதில் சொல்லவில்லை.