Home » கேளிக்கை » மாணவியின் லட்சியக் கனவை நிறைவேற்ற உதவிய விஜய்சேதுபதி

மாணவியின் லட்சியக் கனவை நிறைவேற்ற உதவிய விஜய்சேதுபதி

இப்பயிற்சிக்கு, 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவுகள் ஆகும்.

👤 Sivasankaran22 Jun 2019 3:36 PM GMT
மாணவியின் லட்சியக் கனவை நிறைவேற்ற உதவிய விஜய்சேதுபதி
Share Post

உதய கீர்த்திகா என்ற மாணவி தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். அரசாங்க பள்ளியில் படித்தவர். ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர் போர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவரின் லட்சியக் கனவாக இருந்தது.

போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது.

பயிற்சிச் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவுகள் ஆகும்.

மாணவியின் இந்த லட்சியக் கனவை தெரிந்துக் கொண்ட விஜய்சேதுபதி தனது ரசிகர் மன்றத்தின் தலைமை செயலாளர் மூலமாக பயிற்சிக்கு தேவையான தொகையை வழங்கி உள்ளார்.

விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியின் மூலம் உதயகீர்த்திகாவிடம் பேசி பாராட்டியுள்ளார்.