Home » கேளிக்கை » காஜல் அகர்வால் காதலில் சிக்கினாரா?

காஜல் அகர்வால் காதலில் சிக்கினாரா?

என் மீது அவருக்கு வெறுப்பு வந்து விட்டது. என்னுடனான காதலை முறித்துக் கொண்டார்.

👤 Sivasankaran23 Jun 2019 3:54 PM GMT
காஜல் அகர்வால் காதலில் சிக்கினாரா?
Share Post

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். நல்ல நிறமும், அழகிய முகமும் கொண்ட உங்களிடம் நிறைய பேர் காதலை சொல்லியிருப்பீர்களே? அவர்களில் யாரையாவது நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா? என்று காஜல் அகர்வாலிடம் பத்திரிகையாளர்களால் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த காஜல் அகர்வால்,

''நான் ஒரே ஒருவருடன் காதல்வசப்பட்டு இருக்கிறேன். அப்போது நான் சினிமாவுக்கு வந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு காதல் வந்தது. என் காதலர் சினிமா துறையை சேர்ந்தவர் அல்ல. பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், என்னால் காதலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. காதலரை அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த என் காதலர், ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து விட்டார். என் மீது அவருக்கு வெறுப்பு வந்து விட்டது. என்னுடனான காதலை முறித்துக் கொண்டார். இது, எனக்கு வருத்தமாக இருந்தது. சில நாட்களுக்கு பின்னர் என் மனம் பழைய நிலைக்கு மாறிவிட்டது என்றார்".