Home » கேளிக்கை » நிவேதா தாமஸ் விரும்பியது என்ன?

நிவேதா தாமஸ் விரும்பியது என்ன?

தெலுங்கில் எனக்கு அதிக படவாய்ப்புகள் வந்தன. ஐதராபாத்தில் வீடு இன்னும் வாங்கவில்லை. விரைவில் வாங்குவேன்.

👤 Sivasankaran27 Jun 2019 4:41 PM GMT
நிவேதா தாமஸ் விரும்பியது என்ன?
Share Post

தமிழில் 'பாபநாசம்' என்ற திரைப்படத்தில் நடித்த நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் பிசியாக உள்ளார். நிவேதா தாமஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

"எனக்கு நடன கலைஞராக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஐந்து வயதில் இருந்தே நடனம் கற்று வந்தேன். இப்போது நடிகையாகி விட்டேன். நான் என்ன செய்தாலும் ஒழுங்காக செய்வேன். ஒரே மாதிரி கதைகளில் நடிக்க பிடிக்காது. தமிழ் படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜென்டில்மேன் படத்துக்கு பிறகு தெலுங்கில் எனக்கு அதிக படவாய்ப்புகள் வந்தன. ஐதராபாத்தில் வீடு இன்னும் வாங்கவில்லை. விரைவில் வாங்குவேன்.

மீ டூ ஒரு இயக்கம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எல்லா துறைகளிலும் இருக்கிறது. நடிகைகள் பிரபலமாக இருப்பதால் எளிதாக வெளிப்படுத்த முடிகிறது.

ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ன கதாபாத்திரம் என்றெல்லாம் பலரும் கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து." என்று நிவேதா தாமஸ் கூறினார்.