தெலுங்கில் ராஜு காரி காதி படத்தின் 3வது பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இந்த படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி தமன்னா விலகியுள்ளார்.
ஓம்கர் இயக்கும் இப்படத்தின் துவக்க விழாவில் தமன்னா கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு தமன்னாவிடம் தெரிவிக்காமலேயே கதை மாற்றப்பட்டிருக்கிறதாம். மாற்றப்பட்ட கதை தமன்னாவிற்கு பிடிக்காமல் போனதால், அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உண்மை நிலவரம் என்ன?