மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 2 மாதங்களாக தர்பார் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதியாகி உள்ளது.
ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது.
தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடல் ஒன்று இருப்பதாகவும் அதை நான் பாடி இருக்கிறேன் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
தர்பார் படத்தில் பாடல் பற்றி கூறும் போது, ரஜினிகாந்த் கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் செய்த ஒரு பெரிய காரியத்துக்காக பாராட்டு விழா நடத்துகின்றனர். அப்போது ரஜினிகாந்த் நான் கடமையைத்தான் செய்தேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா. போலீஸ் உடையை கழற்றினால் நானும் உங்களில் ஒருவன்தான் என்று வசனம் பேசுவார்.
தொடர்ந்து ஒரு பாடலை பாடுவார். அந்த பாடலைத்தான் நான் பாடி இருக்கிறேன்" என்றார் எஸ்.பி.பி.