Home » கேளிக்கை » காப்பான் படத்தில் சூர்யா வில்லனா?

காப்பான் படத்தில் சூர்யா வில்லனா?

சூர்யா உளவுத்துறை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதம மந்திரியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

👤 Sivasankaran13 July 2019 4:41 PM GMT
காப்பான் படத்தில் சூர்யா வில்லனா?
Share Post

காப்பான் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து உள்ளனர். இதில் சூர்யா உளவுத்துறை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதம மந்திரியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நல்லவர் போல் இருந்தாலும் அதில் வில்லத்தனம் இருக்கும் என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் தெரிவித்து உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. காப்பான் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.