ஜோதிகா திருமணத்துக்கு பிறகு '36 வயதினிலே' படம் மூலம் நடிக்க துவங்கினார். தொடர்ந்து படவாய்ப்புகள் குவிகின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்தார்.
ராட்சசி படமும் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. 'ஜாக்பாட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
இப்போது புதிதாக நடிக்க இருக்கும் படத்தின் பெயர் "பொன்மகள் வந்தாள்". இந்த படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் ஆகிய 4 இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். இதன் பட பூஜை சென்னையில் நேற்று நடந்தது.