மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் ஆடை படத்தினை உருவாக்கி உள்ளார். இப்படத்தில் அமலா பால் நடித்துள்ளார். அமலாபாலுடன் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.
அமலாபால் ஆடையே இல்லாமல் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் போஸ்டர்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கின.
இன்று ஆடை படம் ரிலீசாக இருந்தது. ஆனால் ஆடை படம் திட்டமிட்டபடி இன்று ரிலீசாக வில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் சென்று சேரவில்லை என்கிறார்கள்.
ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப் பட்டு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று படக்குழுவினர் கூறினார்கள்.