Home » கேளிக்கை » நயன்தாராவை பின்பற்றும் தமன்னா

நயன்தாராவை பின்பற்றும் தமன்னா

இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய 2 படங்களும் பேய் படங்கள்.

👤 Sivasankaran20 July 2019 3:33 PM GMT
நயன்தாராவை பின்பற்றும் தமன்னா
Share Post

நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும் தனக்கென தனியான பாணியை கையாள்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து, முன்னுரிமை கொடுத்து நடிக்கிறார்.

தற்போது தமன்னா தமிழில் 'கண்ணே கலைமானே', 'தேவி 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் எப் 2 பன் அண்ட் ப்ரஸ்ட்ரே‌ஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் நடித்து வெளியாகியுள்ளன. இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய 2 படங்களும் பேய் படங்கள்.

தற்போது தமன்னா நடிப்பில் உருவாகி வரும் 'பெட்ரோமாக்ஸ்' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவை கூட்டணியுடன் தமன்னா களம் இறங்குகிறார்.