Home » கேளிக்கை » சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறார் பரேஷ் ராவல்

சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறார் பரேஷ் ராவல்

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

👤 Sivasankaran22 July 2019 4:43 PM GMT
சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறார் பரேஷ் ராவல்
Share Post

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்டு 30-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் பட்டியல் தமிழிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் என நீள்கிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பரேஷ் ராவல் வில்லனாக நடிக்கிறார். யார் இந்த பரேஷ் ராவல்?

80களில் இந்தித் திரையுலகில் அறிமுகமான பரேஷ் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். பரேஷ் ராவல் தேசிய விருது பெற்ற நடிகர். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பரேஷ் ராவல், 2014 -2019 எம்பியாக பணியாற்றியவர்.