Home » கேளிக்கை » சாதனை படைத்த பிகில் படத்தின் பாடல்

சாதனை படைத்த பிகில் படத்தின் பாடல்

நேற்று இரவு 10 மணிக்கு ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் வெளியானது.

👤 Sivasankaran24 July 2019 3:40 PM GMT
சாதனை படைத்த பிகில் படத்தின் பாடல்
Share Post

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார்.

நேற்று இரவு 10 மணிக்கு 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியிருந்தார்.

தற்போது இந்த பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை வெளியான பாடல் வரி வீடியோவில் சிங்கப்பெண்ணே பாடல், 17 மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.