Home » கேளிக்கை » நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் வெளியானது

நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் வெளியானது

இந்த படம் ஆகஸ்ட் 8ம் திகதி திரைக்கு வருகிறது.

👤 Sivasankaran27 July 2019 2:49 PM GMT
நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் வெளியானது
Share Post

'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். வினோத் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்.

படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவது போல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. இந்த படம் ஆகஸ்ட் 8ம் திகதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் படத்தின் பாடலான, "அகலாதே" என்ற காதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த பாடலில், அகலாதே அகலாதே நொடி கூட நகராதே செல்லாதே செல்லாதே கணம் தாண்டி போகாதே... போன்ற மனதை மயக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன.