Home » கேளிக்கை » தன் மனைவியை புகழ்ந்து பேசிய சூர்யா

தன் மனைவியை புகழ்ந்து பேசிய சூர்யா

ஜோதிகா, ரேவதி, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள...

👤 Sivasankaran29 July 2019 4:16 PM GMT
தன் மனைவியை புகழ்ந்து பேசிய சூர்யா
Share Post

ஜோதிகா, ரேவதி, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ஜாக்பாட்.

ஜாக்பாட் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா,

"ஜோதிகா எனக்கு கிடைத்த ஜாக்பாட். திருமணத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு பலமுறை யோசிப்பார். இந்த கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்று அதில் நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். நடிக்க முடிவு செய்த பிறகு அவருடைய ஈடுபாடு முழு அளவில் இருக்கும்.

ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவின் சிலம்ப சண்டையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த சிலம்ப சண்டைக்காக தினமும் 2 மணிநேரம் ஆறு மாதங்கள் சிலம்ப பயிற்சி பெற்றார். குழந்தைகள் தியா, தேவ் ஆகியோரை குளிக்க வைப்பது, சாப்பிட வைப்பது என்று அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு செல்வார் என ஜோதிகாவினை புகழ்ந்து, பெருமையுடன் பேசினார்.