Home » கேளிக்கை » அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன்

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன்

இன்று இப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் துவங்கி உள்ளது.

👤 Sivasankaran3 Aug 2019 5:51 PM GMT
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன்
Share Post

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள 'சங்கத்தமிழன்' படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

'சங்கத்தமிழன்' படத்தில் விஜய் சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் காரைக்காலில் முடிவுபெற்றது. இன்று இப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் துவங்கி உள்ளது.