தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது "காதல் மோதல் 50/50" எனும் ஆக்ஷன் கலந்த பேய் படம் உருவாகி வருகிறது.
அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் "த்ரயா" என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் யோகிபாபுவிற்காக அமைக்க உள்ளார்.