Home » கேளிக்கை » ரசிகர்களுக்கு சவால் விட்ட ரெஜினா

ரசிகர்களுக்கு சவால் விட்ட ரெஜினா

எவரு படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு டுவீட் செய்துள்ளார்.

👤 Sivasankaran18 Aug 2019 3:17 PM GMT
ரசிகர்களுக்கு சவால் விட்ட ரெஜினா
Share Post

ரெஜினா கசண்ட்ரா. இவரது நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள தெலுங்கு படம் 'எவரு'. இது ஒரு திரில்லர் படம். விமர்சகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து எவரு படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு டுவீட் செய்துள்ளார். அதாவது தனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், தன்னுடன் காபி குடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

"எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?" என அவர் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என ரெஜினா கூறியுள்ளார்.