Home » கேளிக்கை » அசுரன் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது

அசுரன் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது

தனுஷின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

👤 Sivasankaran22 Aug 2019 5:02 AM GMT
அசுரன் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
Share Post

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, கருணாஸ் மகன் கென் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் அக்டோபர் 4ம் திகதி ரிலீசாகிறது. இன்று இப்படத்தின் புதிய கெட் அப் போஸ்டர் வெளியானது. தனுஷின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.