பாஸ்கர் ஒரு ராஸ்கல், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள் ஆகிய படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்த நிகிஷா படேலுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் பாண்டிமுனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குனருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீர் என்று அந்த படத்தில் இருந்து நிகிஷா நீக்கப்பட்டார்.
புதிய படத்திற்கான வாய்ப்புக்காக காத்திருக்கும் நிகிஷா, சமூகவலைதளங்களில் அதற்கான வலை வீசி வருகிறார்.
மும்பை வீட்டில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த நிகிஷா துருக்கி சென்றுள்ளார். கடற்கரை பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து என்னைப் பார் என் அழகைப்பார் என்று கமென்ட் பகிர்ந்திருக்கிறார்.