நகைச்சுவையில் கலக்கி வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான 'ஏ1' திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது 'டகால்டி' படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதன் டைட்டில் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ம் திகதி வெளியிடப்படும்.