வில்லனாக அறிமுகமாகி தற்போது நகைச்சுகையில் அசத்தி வருகிறார் மொட்டை ராஜேந்திரன்.தற்போது 'நானும் சிங்கள் தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக தினேஷும், கதாநாயகியாக தீப்த்தி ஷெட்டியும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் லண்டன் வாழ் தமிழனாக எப்.எம். ஸ்டேசனில் ஆர்.ஜே.வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். மிஸ்டர்.லவ் என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குருவாக நடித்திருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரனின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார் இயக்குனர் ரா.கோபி. நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை என்றார்.