Home » கேளிக்கை » சேரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி

சேரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி

இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சித்து வருகிறேன்

👤 Sivasankaran3 Sep 2019 5:31 PM GMT
சேரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி
Share Post

பிக்பாஸில், பார்வையாளரின் கேள்விக்கு பதிலளித்த சேரன், "நிச்சயம் எனது 'கம்பேக்' ஒரு 'ஸ்ட்ராங்கான கம்பேக்' ஆகத்தானிருக்கும். அதற்கான பேச்சுவார்த்தையை முடித்து விட்டுத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்க உள்ளேன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என கூறினார் சேரன்.

ஆகஸ்ட் 2-ம் திகதி, சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதற்காக நுழைந்தேன் என்ற காரணத்தை கூறும் போது, விஜய் சேதுபதியின் மூலமாகத் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே தெரியும். அவரால் தான் உள்ளேயே நுழைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சித்து வருகிறேன்' என்று கூறியிருந்தார்.

தான் எடுக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்றும் கூறினார்.