'கே டி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னா தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, பிரபுதேவா, தனுஷ் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
பாகுபலியில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். தற்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
தற்போது விஷால் ஜோடியாக 'ஆக்ஷன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். முழு நீள சண்டை படமாக தயாராவதால் ஆக்ஷன் என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் தமன்னா பெண் ராணுவ கமாண்டோ அதிகாரியாக வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் மற்றும் பிரத்யேகமாக சண்டைகள் கற்று நடித்து இருக்கிறார்.