Home » கேளிக்கை » கன்னிராசி படம் எப்போது ரிலீஸ்?

கன்னிராசி படம் எப்போது ரிலீஸ்?

ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

👤 Sivasankaran13 Sep 2019 4:30 PM GMT
கன்னிராசி படம் எப்போது ரிலீஸ்?
Share Post

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி ராசி'. இந்த படத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர்.


ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.


இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. மேலும் இம்மாதம் இறுதியில் குடும்பங்களை மகிழ்விக்க 'கன்னிராசி' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.