கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' படத்துக்கு திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நிவின் பாலி நடிப்பில் 'படவெட்டு' என்ற படம் உருவாகவுள்ளது.
இதனை அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்க உள்ளார். இதன் நாயகியாக நடிக்க அதிதி பாலனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். 'அருவி' படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். அதிதி பாலன். 'படவெட்டு' படத்தின் கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.