Home » கேளிக்கை » கபடி விளையாட கற்றுக் கொள்கிறார் தமன்னா

கபடி விளையாட கற்றுக் கொள்கிறார் தமன்னா

விஷால் ஜோடியாக நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் ராணுவ உளவு அதிகாரி கதாபாத்திரம்.

👤 Sivasankaran30 Sep 2019 4:07 AM GMT
கபடி விளையாட கற்றுக் கொள்கிறார் தமன்னா
Share Post

தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

தமன்னா தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். விஷால் ஜோடியாக நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் ராணுவ உளவு அதிகாரி கதாபாத்திரம்.

தற்போது தெலுங்கில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை பெங்கால் டைகர் வெற்றி படத்தை எடுத்து பிரபலமான சம்பத் நந்தி இயக்குகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் கபடி விளையாடி பயிற்சி எடுத்து வருகிறார்.