Home » கேளிக்கை » தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு வீடு வழங்கிய ரஜினி

தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு வீடு வழங்கிய ரஜினி

ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை...

👤 Sivasankaran8 Oct 2019 2:11 PM GMT
தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு வீடு வழங்கிய ரஜினி
Share Post

ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கலைஞானம் தயாரித்திருந்தார். கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார். 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகிறது.

கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் தவித்து வந்தார். கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்தினார். இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்தும் பங்கேற்றார். விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கூறிய பிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் கலைஞானம் அவர்களுக்கு தன் சொந்த செலவிலேயே வீடு வாங்கி தருவதாக கூறினார். அதன்படி விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி, 2 கார் பார்க்கிங் கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினிகாந்த் பதிவு செய்து கொடுத்தார். சரஸ்வதி பூஜை தினமான நேற்று காலை, 10 மணிக்கு, ரஜினி கலைஞானத்துக்கு வழங்கிய வீட்டுக்கு சென்றார். கலை ஞானம் மற்றும் அவரது குடும்பத்தார், சால்வை அணிவித்து, ரஜினிக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ரஜினி வீடு வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த கலைஞானம், விரைவில் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.