Home » கேளிக்கை » ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்

ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்

தர்பார் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்.

👤 Sivasankaran13 Oct 2019 3:34 PM GMT
ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்
Share Post

ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளிவரவுள்ளது 'தர்பார்'. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை கட்டியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. எனினும் தீவிர படப்பிடிப்பு பணிகளால் அதில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனிடையே, தர்பார் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்.