Home » கேளிக்கை » பிரபல இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் சாந்தினி

பிரபல இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் சாந்தினி

இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran15 Oct 2019 3:50 PM GMT
பிரபல இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் சாந்தினி
Share Post

தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு. சித்து பிளஸ் 2 வில் திரைக்கதை பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான 'ராஜா ரங்குஸ்கி' வரை சாந்தினியில் கலைப் பயணம் தொடர்ந்துக் கொண்டு உள்ளது.

இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்தை அடுத்து ராதாமோகன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.